TNPSC Thervupettagam

உலக புத்தக தினம் – ஏப்ரல் 23 

April 25 , 2020 1617 days 506 0
  • இது வாசித்தல், பிரசுரித்தல் மற்றும் காப்புரிமை ஆகியவை  குறித்து ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோவினால் அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • இது உலக புத்தக காப்புரிமை தினம் அல்லது சர்வதேச புத்தக தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இது 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டானது இத்தினத்தின் 25வது பதிப்பாகும். 
  • மலேசியாவின் கோலாலம்பூர் நகரமானது 2020 ஆம் ஆண்டிற்கான உலக புத்தகத் தலைநகரமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் முழக்கம் “கேஎல் பாகா – வாசித்தல் மூலம் நலம் பெறுதல்” என்பதாகும். 
  • இத்தினத்தன்று வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுல் செர்வன்டிஸ் மற்றும் இன்கா கேர்சிலசோ டி லா வேகா போன்ற சில பிரபலமான புத்தக ஆசிரியர்கள் இறந்ததால், ஏப்ரல் 23 ஆனது மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்